கவிதைமணி

நினைவுப் பெட்டகம் 2017: கவிஞர் சாரதா க. சந்தோஷ்

கவிதைமணி

கடலன்னையின் கரையில்..
ஜல்லிக்கட்டு போராட்டம்..
உலகத்தை திரும்பி
பார்க்க வைத்த போராட்டம்

பிஞ்சுகளின் மவுன
ஓலங்கள்..
கருகிய மலர்கள்
தொட்டில்களில் 
கோரக்பூர் அரசு
மருத்துவமனையில்..

கையை கட்டிக் கொண்டு..
வேடிக்கை பார்த்த உலகம்..
ரோஹிங்கியா இனப்படுகொலை.. 

மூச்சுத்திணறிய
உயிரினங்கள்..
நீல கடலை கரியாக்கிய
எண்ணெய்க் கப்பல்கள்.. 

தலைநகரில் 
மண்டை ஓடு கையிலேந்தி..
கோவணத்தில் தமிழக விவசாயிகள்..

அந்தோ பரிதாபம்..
நேரமில்லை திரும்பி பார்க்க 
எந்த அரசுக்கும்..

உயிரிழந்த அப்பாவிகள்
அரியானா மாநிலத்தில்..
ஊரையே விழுங்கும்
பாபாக்கள்..
கடவுளின் பெயரால்..

நடுங்கிய இந்தியர்கள்
டொனால்ட் ட்ரம்பின்
பதவியேற்றம்.. 
அமெரிக்க அதிபராக..

கொல்லும் அவலம் 
தந்தையே மருமகனை
சாதி மறுப்பு திருமணம்..

ஒரு தொகுதி தேர்தலா..
நாட்டுக்கே தேர்தலா..
விலைபேசப்பட்ட
தமிழர் மானம்..

பாடினான் பாரதி 
30 கோடி முகமுடையாள்..
இன்றோ 
130 கோடி முகமுடையாள்..
கோடீஸ்வரர்கள் 101
இந்தியர்கள் மட்டுமே..
மற்றவர்கள்..?? 

கோடியின் பூஜ்ஜியத்தின் எண்ணிக்கையையும்
அறியாதவன்.. 
கடைக்கோடியில்
வாழும் சாமான்யன்..

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..
சீறியெழுந்தாள்..
இயற்கையன்னையும்..
யார் மீது கோபமோ..
நாட்டை சீரழிப்பவர்கள் மீதா..?? 

ஓகி புயலானாள்..
ஓங்கியடித்தால் 
உயிர்கள் பிழைக்குமா..?? 

காட்டியிருக்கலாம் 
கருணையை நீயாவது..
தாயல்லவா..?!
ஏழையுன் மைந்தன் மீது
உனக்கென்ன ஆற்றாமை..?!

2017..தொடங்கியது 
மெரினாவில் 
முடிந்தது..
குமரியில்.. 

இன்னும் எத்தனையோ.. 
பதிந்ததுயிதுவே.. 
வெந்து தணிந்த 
நெஞ்சத்தில்.. 
#நினைவு பெட்டகத்தில்..

வேதனையுடன் வழியனுப்பினேன்..
சென்ற ஆண்டை..
இன்முகத்துடன் 
வரவேற்றேன்..
புத்தாண்டை..

மறதியெனும் பெருங்குணம்
இறைவன் அளித்த
அருமருந்தாமே.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT