சைவ வகைகள்

பனீர் சப்பாத்தி ரோல்

ஹேமலதா

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு - 1 கிண்ணம்
பனீர் - 1 கிண்ணம்
உருளைக்கிழங்கு - 2
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
தக்காளி  - 1

செய்முறை:

கோதுமை மாவை பிசைந்து சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.

வாணலியில்  எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர், வேக வைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி வதக்கவும்.

அத்துடன் பனீர் சேர்த்து வதக்கவும். அடுத்து, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம் மசாலா, உப்பு, சேர்த்து வதக்கி 5 நிமிடம்  மூடிவிடவும்.

பின்னர், மசாலா கலவையை இறக்கி சப்பாத்திக்குள் வைத்து ரோல் செய்து பரிமாறவும். மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT