நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 8

செ.குளோரியான்

பாடல் 8

எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள், தும்பிகாள்,
கனக்கொள் திண் மதிள் புடைசூழ் திருமூழிக்களத்து உறையும்
புனக்கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே.

பெரிய சோலையிலே இரை தேடி உண்டபடி, மனத்துக்கு இன்பம் ஏற்படும்விதமாகத் திரிகிற வண்டினங்களே, தும்பிகளே, கனமான, திண்மையான மதிள் சுவரால் சூழப்பட்ட திருமூழிக்களத்திலே உறைகிற எம்பெருமான், புனத்திலே விளைந்த காயாம்பூவைப்போன்ற திருமேனியைக் கொண்டவர், பூந்துழாயைத் திருமுடியிலே அணிந்தவர், அவரிடம் எனக்காக ஒன்று சொல்லுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT