நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 2

செ.குளோரியான்

பாடல் 2

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய்த்
தானே யான் என்பான் ஆகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே, பாலே, கன்னலே, அமுதே, திருமாலிருஞ்சோலை
கோனே ஆகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே.

எம்பெருமான், எல்லா உலகங்களும் உயிர்களும் தானே என்னும்படி நிறைந்தான், ‘யான்’ (நான்) என்பதும் அவனே ஆகிவிட்டான், (நான் அவனைப் போற்றிப் பாடும்போது) தன்னைத்தானே அவன் துதித்துக்கொண்டான், எனக்குத் தேனாக, பாலாக, கரும்பாக, அமுதாகத் திகழ்ந்தான், திருமாலிருஞ்சோலையின் தலைவனாக நின்றான், என் உயிரை முற்றிலுமாக உண்டான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT