நூல் அரங்கம்

உனக்கென்று ஒரு சிகரம்

DIN

உனக்கென்று ஒரு சிகரம் - வ.வே.சு; பக்.336; ரூ.225; வானதி பதிப்பகம், சென்னை-17; 044 - 2434 2810.
 தினமணி இளைஞர்மணியில் வெளிவந்த சுயமுன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பள்ளியில் படிக்கும் மாணவர்களிலிருந்து, வேலை தேடும் இளைஞர்கள் வரை அவசியம் படிக்க வேண்டிய நூல்.
 சுயமுன்னேற்றம் என்ற எல்லையோடு நின்றுவிடாமல் இன்றைய இளம் பருவத்தினரிடம் படிந்து கிடக்கும் பல பழக்க, வழக்கங்களை, செயல்களை, சிந்தனைமுறைகளை நல்லமுறையில் மாற்றியமைக்க இந்நூல் வழிகாட்டுகிறது.
 உதாரணமாக ஒழுங்கு என்பதை விளக்கும்போது, சுய ஒழுக்கத்தில் இருந்து, எந்தப் பொருளையும் அதற்குரிய இடத்தில் ஒழுங்காக வைப்பது, செயல்களை ஒழுங்கமைத்துக் கொள்வது, பேச்சில் ஒழுங்கு என ஒழுங்கின் எல்லா அம்சங்களையும் விவரிக்கிறது.
 ஒன்றில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும்? நினைவாற்றலை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்? காலம் தவறாமையை ஏன் பின்பற்ற வேண்டும்? வாய்ப்புகளை எவ்வாறு கண்டுபிடித்து முன்னேற வேண்டும்? நம்முடைய குறைகளை எவ்விதம் களைய வேண்டும்? விளையாட்டு மூலமாகவே எப்படிப் படிக்க முடியும்? பிறரிடம் எவ்வாறு உரையாட வேண்டும்? வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துவது எப்படி? மனப்பாடம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என வாழ்வில் முன்னேற விரும்பும் இளம் தலைமுறையினர் தம்மைச் செதுக்கிக் கொள்ள இந்நூல் அற்புதமாக வழிகாட்டுகிறது.
 இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் பழகும் வாய்ப்புப் பெற்ற நூலாசிரியர், அந்த அனுபவங்களின் அடிப்படையில் எல்லாரும் எளிதாகப் புரிந்துகொள்ளும்விதமாக இந்நூலை படைத்திருக்கிறார். இளம் பருவத்தினர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT