நூல் அரங்கம்

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு

DIN

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு - மிகையீல் நைமி; மலையாளத்தில் எம்.ஏ.அஸ்கர்; தமிழில்: சிற்பி; பக். 160; ரூ.150; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி-3; ) 04259 - 236030.
 கலீல் ஜிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய இளம் வயதில் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அவர் குடும்பம் இடம் பெயர்கிறது. மிகுந்த வறுமையில் வாடிக் கொண்டிருந்த சிறுவனான கலீல் ஜிப்ரான், ஓவியம் வரைவதில் ஆர்வம் உடையவராக இருக்கிறார். ஓவியக் கண்காட்சி நடத்துகிறார். எனினும் ஓவியம் வரைவதற்கான அதே மனநிலை அவரைக் கவிதை எழுதவும் வைக்கிறது. சிறந்த சிறுகதைகளையும் எழுதுகிறார். தன்னைவிட பத்து வயது மூத்தவரான மேரி எலிசபெத் ஹாஸ்கெலுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. தனது 48 ஆவது வயதில் நோயின்காரணமாக மரணமடைகிறார்.
 கலீல் ஜிப்ரானின் வாழ்க்கை வரலாற்று உருது மொழியில் அவருடைய நண்பரான மிகையீல் நைமி எழுதியிருக்கிறார். அதன் தமிழாக்கம்தான் இந்நூல்.
 வாழ்க்கை வரலாறு என்பதை விட கலீல் ஜிப்ரானின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் என்று இந்நூலைச் சொல்லலாம். ஓவியம், கவிதை, இலக்கியம் குறித்த கலீல் ஜிப்ரானின் கருத்துகள், கவிதை மழையாக நூல் முழுதும் பொழிந்திருக்கின்றன. மிகவும் குறைவான சொற்களில் வாழ்வின் சாரம்சத்தைச் சொல்லும் பல அற்புதமான வரிகள் நூல் முழுக்க நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. தமிழில் மொழிபெயர்த்த சிற்பி பாலசுப்பிரமணியம் ஒரு கவிஞர் என்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது. நூலை வாசிப்பவர்களின் மனதில் பதியும் உணர்வுகளின் குவியல் இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT