நூல் அரங்கம்

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும்

DIN

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும் - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.280; ரூ.250; அன்னம், எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007.
 கோயில் சார்ந்த குடிகளும் குடிகள் சார்ந்த கோயிலுமே தமிழர் வாழ்நெறி. ஆனால், கோயில்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் கூட அக்கோயில்களோடு தொடர்புடைய குளங்கள் குறித்து அறிந்திருப்பார்களா என்பது ஐயமே.
 இந்நூலில் திருக்கோயில்கள் குறித்தும், திருக்குளங்கள் குறித்தும் அரிய பல செய்திகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். திருவாரூர் கமலாலய தீர்த்தக் குளம் குறித்த முதல் கட்டுரையில் தொடங்கி, குத்தாலம், திருச்செங்கோடு, திருவேங்கடம், கும்பகோணம், திருவண்ணாமலை, தாராசுரம், சிதம்பரம் போன்ற தமிழக சிவாலயங்கள் குறித்தும், தாய்லாந்து, கம்போடியா ஆகிய வெளிநாட்டு சிவாலயங்கள் குறித்தும், திருக்குளங்களின் சிறப்பு குறித்தும் 32 கட்டுரைகளில் விவரித்துள்ளார்.
 ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிட்ட கோயில் குறித்தும், குளம் குறித்தும் மட்டும் விளக்குவதோடு நின்றுவிடாமல், அக்கோயில் குறித்த தல வரலாற்றுக் குறிப்புகள், அங்குள்ள கல்வெட்டுகள், செப்பேட்டு சாசனங்கள், தேவாரப் பாடல்கள் போன்ற பல செய்திகளையும் இணைத்திருக்கிறார் நூலாசிரியர்.
 சுந்தரமூர்த்தி சுவாமிகளின் "பொன்செய்த மேனியினீர்' எனத்தொடங்கும் தேவாரப் பாடல் திருமுதுகுன்றத்துப் பதிகமாகக் கருதப்பட்டாலும், அது பாடப்பட்ட இடம் திருவாரூர் கமலாலயத் துறை என்று கூறுகிறார்.
 ஒவ்வொரு கோயில் குறித்த திருமுறைப் பாடலையும், கோயில் சிற்பங்களின் புகைப்படங்களையும் இணைத்திருப்பது சிறப்பு. ஆன்மிகவாதிகள் மட்டுமல்லாது கலை, இலக்கிய ஆர்வலர்களும் அறிந்துகொள்ள வேண்டிய ஏராளமான தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT