உலகத் தமிழர்

தைவான் தமிழ் சங்கத்தின் சித்திரை திருவிழா - 2017

DIN

தைவான் தமிழ்ச்சங்கத்தினால் 13-05-2017 சனிக்கிழமை அன்று தைபேய் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக அரங்கில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சங்கத்தின் துணைத்தலைவர் இரமேஷ் பரமசிவம் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று உரையாற்ற‌, தமிழ்த்தாய் வாழ்த்துடன் சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கேற்றி சித்திரை விழா இனிதே தொடங்கிவைக்கப்பட்டது.

தைவான் கவிஞரும் திருக்குறளை சீன மொழிக்கு மொழிபெயர்த்தவரும், தைவான் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான முனைவர் யூசி அவர்கள் துவக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீதரன் மதுசூதனன், முதன்மை இயக்குநர், இந்தியா ‍ தைபே அசோசியேஷன் (ITA), தேசிய தைபே தொழில்நுட்ப பல்கலைகழகத்திலிருந்து பேராசிரியர் முனைவர் ஷியாவ்-ஷிங் சென், டீன், சர்வதேச மாணவர்கள் விவகாரத்துறை, பேராசிரியர் ஷெங் - துங் ஹுவாங் மற்றும் பேராசிரியர் ஷென்-மிங் சென், இரசாயன பொறியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை, ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தைவானில் ஆராய்ச்சி பட்டம் படிக்கும் தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த வருடம் முதல் தைவான் தமிழ்ச்சங்கத்தின் 'இளம் ஆராய்ச்சியாளர் விருது' வழங்கப்பட்டது.

இரசாயன பொறியியலுக்கான விருதை மேதகு ஸ்ரீதரன் மதுசூதனன் வழங்க ராஜ் கார்த்திக், தேசிய தைபே தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

உயிரியலுக்கான விருதை முனைவர் யூசி வழங்க செல்வபிரகாஷ், தேசிய சியோ துங் பல்கலைக்கழகம், அவர்கள் பெற்றுக்கொண்டார். இயற்பியலுக்கான விருதை துணைத்தலைவர் முனைவர் சங்கர் ராமன் வழங்க பாக்கியராஜ், தேசிய தைவான் பல்கலைக்கழகம்  பெற்றுக்கொண்டார்.
 

விழாவில் கடந்த வருடத்தில் தைவானின் பல்வேறு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்களை கெளரவ படுத்தும் விதமாக அவர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு பத்திரம் கொடுக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் யூசி மற்றும் துணைதலைவர்கள் சங்கர் ராமன், இரமேஷ் பரமசிவம் அவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.

தைவான் தமிழ்ச் சங்த்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆர்வலர்கள் உதயணன் மற்றும் ராஜு சுகுமாரன் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. தைவான் வாழ் தமிழர் முனைவர் ஜெ.வினாயகம் அவர்களின் 'சித்திரம் பேசுதடா' என்ற கவிதை தொகுப்பை தலைவர் யூசி வெளியிட துணைத்தலைவர் இரமேஷ் பெற்றுக்கொண்டார். மேலும் தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் கலை , நடனம் மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளும், சிறுவர்களுக்கான ஓவிய போட்டிகளும், கவிதை போட்டியும் நடைபெற்றது. தைவான் தமிழ்ச்சங்கத்தின் கிரிக்கெட் கோப்பை 2017 ல் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது. விழாவில் சுமார் 450 பேர் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. 

இறுதியாக தமிழ் சங்கத்தின் பொது செயலாளர் முனைவர் ஆகு பிரசண்ணன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், விழா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் துணை பொதுசெயலாளர் சு. பொன்முகுந்தன் , பொருளாளர் முனைவர் சந்தானமூர்த்தி நாச்சிமுத்து மற்றும் முனைவர் வீரப்பன் மணி ஆகியோருக்கும் நன்றி கூற நாட்டுப்பன்னுடன் விழா இனிதே நிறைவுற்றது. 

- P. ரமேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT