விளையாட்டு

3-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! ராகுல், ரஹானே அவுட்!

டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.

சநகன்

இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.
மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா - இலங்கை ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியே தொடரை வெல்லப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய ஆட்டமாக விளங்குகிறது.இரு அணிகளும் தொடரை வெல்லும் முனைப்பில் இருப்பதால், மூன்றாவது டெஸ்டில் வெற்றிவாகை சூடி கோப்பையைக் கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் முரளி விஜய், சஹாவுக்குப் பதிலாக புஜாரா, நமன் ஓஜா ஆகியோர் இடம்பிடித்தார்கள். இலங்கை அணியில் சங்ககாரா, முபாரக், சமீராவுக்குப் பதிலாக பெரேரா, பிரதீப், தரங்கா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.

முதல் ஓவரிலேயே ராகுலின் விக்கெட்டை கைப்பற்றினார் தம்மிகா பிரசாத். பிறகு நான்காவது ஓவரில் ரஹானே, பிரதீப்பின் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT