விளையாட்டு

இங்கிலாந்து அணியுடன் பவுலிங் பயிற்சியில் ஈடுபடும் சச்சின் மகன் அர்ஜூன் (வீடியோ இணைப்பு)

முதல்முறையாக அர்ஜூனின் பவுலிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் பரவசமாகியுள்ளார்கள்.

எழில்

சச்சின் டெண்டுல்கரின் மகனான 15 வயது அர்ஜூன், கிரிக்கெட் தொடர்பான பயிற்சிகளை இங்கிலாந்தில் மேற்கொண்டு வருகிறார். ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் பயிற்சி முகாமிலும் அவர் இணைந்துள்ளார். பவுலிங் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜூனின் வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஆஷஷ் டெட்ஸ் போட்டிக்காக இங்கிலாந்து அணி வீரர்கள் லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டபோது சச்சின் மகனையும் அவர்களுடன் காணமுடிந்தது. அர்ஜூனுக்கு இங்கிலாந்து அணியின் பவுலிங் பயிற்சியாளர் கிப்சன் பயிற்சி அளித்தார்.

சச்சினின் நண்பரும் முன்னாள் கவுண்டி கிரிக்கெட் வீரருமான நீல் பர்ன்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் துணைப் பயிற்சியாளரிடம் சச்சினை பயிற்சியில் சேர்த்துக்கொள்ளமுடியுமா என்று கோரிக்கை வைத்தார். இதற்கு உடனே சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அர்ஜூன் இங்கிலாந்து அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். இங்கிலாந்து கூடாரத்தில் சச்சின் மகன் பயிற்சியில் ஈடுபட்டது கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தியது. இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியின்போது வாசிம் அக்ரம், அர்ஜூனுக்குப் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது அர்ஜூன் பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. முதல்முறையாக அர்ஜூனின் பவுலிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் பரவசமாகியுள்ளார்கள்.

பேட்ஸ்மேனாக இதுவரை அறியப்பட்டு வந்த அர்ஜூன், இப்போது ஆல்ரவுண்டராகும் முயற்சியில் ஈடுபடுவது தெரிகிறது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களின் தேவை எப்போதும் இருக்கும். அர்ஜூன் இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டராக இடம்பெற வாய்ப்புண்டா? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT