விளையாட்டு

இரு திருமண முறைப்படி கரம் கோர்க்கும் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் ஜோடி!

கிரிக்கெட் வீரர் என்பதை விடவும் தினேஷ் கார்த்திக் நல்ல மனிதர் என்பதால்தான் காதலித்தேன்...

எழில்

'எனக்கு கிரிக்கெட் வீரர்களே பிடிக்காது. இப்போது இதை வைத்து என் தோழிகள் பயங்கரமாகக் கிண்டல் செய்கிறார்கள். கிரிக்கெட் வீரர் என்பதை விடவும் தினேஷ் கார்த்திக் நல்ல மனிதர் என்பதால்தான் காதலித்தேன்.' என்று முன்பு ஒரு பேட்டியில் சொன்னார் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல். இப்போது இருவருக்கும் ஆகஸ்ட் 18 அன்று திருமணம் நடக்கவுள்ளது. ஒருமுறை அல்ல, இரு திருமண முறைப்படி.

தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலும் காதலிக்கிறார்கள் என்று சில வருடங்களுக்கு முன்பு செய்தி வந்தபோது அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. செய்தி வந்த வேகத்தில் உடனே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அவரவர் தொழிலில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, 2013-ல் நிச்சயதார்த்தம் நடந்தாலும் 2015ல் தான் திருமணம் என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி வருகிற ஆகஸ்ட் 18 அன்று இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படியும் ஆகஸ்ட் 20 அன்று தெலுங்கு நாயுடு முறைப்படியும் திருமணம் நடக்கவுள்ளது. சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இத்திருமணம் நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT