முதல் ஒரு நாள் ஆட்டம்: இங்கிலாந்து வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.
தென் ஆப்பிரிக்காவின் புளோயம்ஃபான்டீனில் புதன்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 105 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 33.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இங்கிலாந்து 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Advertisement
தென் ஆப்பிரிக்காவின் டி காக் 96 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 138 ரன்கள் எடுத்தார். எனினும் மழையால் அவருடைய அதிரடி வீணானது. டி காக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் சனிக்கிழமை போர்ட் எலிசபெத்தில் நடைபெறுகிறது.