150வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது 150வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது 150வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார்.
ஷிகர் தவான் 2010இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 36 வயதான ஷிகர் தவான் விளையாட உள்ளார். இந்தியாவில் 150க்கும் மேலாக விளையாடியவர் வரிசையில் இவர் 21வது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
149 போட்டிகளில் விளையாடிய அவர் 6284 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 45.53. 17 சதங்கள், 35 அரை சதங்களும் இதில் அடங்கும். அவரது அதிகபட்ச ரன்கள் 143 என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
இதுவரை இந்தியாவிற்காக 150 ஒருநாள் போட்டிகளை கடந்து விளையாடிய வீரர்கள் பட்டியல்:
சச்சின் டெண்டுல்கர் 463
எம்.எஸ். தோனி 347
ராகுல் திராவிட் 340
மொ.அசாரூதின் 334
சவுரவ் கங்குலி 308