விளையாட்டு

ஆப்கானிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளராகும் முன்னாள் இங்கிலாந்து வீரர்

DIN

முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனதன் டிராட் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். 

41 வயதாகும் டிராட் தென்னாப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிவர். இவர் 2018இல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஸ்காட்லாந்து அணிக்கு 2021 டி20 போட்டிகளுக்கு பேட்டிங் குறித்து ஆலோசனை வழங்குபவராக பணிபுரிந்தார். ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து சுற்று பயணத்தின் போது இவர் பொறுப்பேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஆனது குறித்து டிராட் கூறியதாவது: 

ஒரு கிரிக்கெட் அணியாக ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி கடந்த சில வருடங்களாக ஆச்சரியமாக இருக்கிறது. இந்த அணிக்காக பயிற்சியாளர் பொறுப்பினை ஏற்பதற்காக நான் பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற மிகவும் ஆவலாக உள்ளேன். ஆப்கானிஸ்தான் மக்கள் பெருமைப்படும் வகையில் அணியினை வழிநடத்துவேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT