கிருணால் பாண்டியா தந்தையானதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய ஆல்ரவுண்டர் கிருணால் பாண்டியா அவரது மனைவி பண்குரி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஞாயிற்றுக்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கிருணால் பாண்டியா அந்த குழந்தைக்கு, “கவிர் கிருணால் பாண்டியா” எனப் பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் பிரபலங்கள் கிருணால் பாண்டியாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல கிரிக்கெட் வீரர் லெஜண்டரி சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இருவருக்கும் வாழ்த்துகள்! பெற்றோர்கள் ஆகும் பயணத்திற்கு வாழ்த்துகள். கவிருக்கு எனது அன்புகள். அவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.