விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: இந்திய மகளிர் பந்து வீச்சு

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிருக்கு எதிரான் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

DIN

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிருக்கு எதிரான் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 3 போட்டிகள் இருக்கு. 2 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கும் இதில் 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படும். பின்னர் அதில் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும். இந்த தொடர் மொத்தம் 16 போட்டிகளை கொண்டது குறிப்பிடத்தக்கது. 

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்ற இந்தியாவிற்கு இந்தப் போட்டி முக்கியமானது. 2வது போட்டி பாகிஸ்தான் மகளிருடன். இப்போட்டி மழையால் தாமதமாக தொடங்கவுள்ளது. மேலும் போட்டியின் ஓவர்கள் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் சார்பில்  ஸ்மிருதி மந்தனா, ஷெபாஃலி வர்மா, யாஷ்டிகா பாட்டியா, ஹர்மன்ப்ரீத், ஜெமிமா, மேக்னா, தீப்தி, ராதா, ஸ்நேகா, ரேனுகா ஆகியோர் விளையாட உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT