கோப்புப் படம் 
விளையாட்டு

அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் : கங்குலி புகழாரம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று (ஜூன் 5) சதம் விளாசி இங்கிலாந்து அணியினை வெற்றி பெறச் செய்த ஜோ ரூட்டுக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

DIN

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று (ஜூன் 5) சதம் விளாசி இங்கிலாந்து அணியினை வெற்றி பெறச் செய்த ஜோ ரூட்டுக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

வலது கை பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் தனது அபார பேட்டிங் திறமையால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில்  1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்டின் 4வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களையும் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இந்த சாதனையைப் படைத்த சிறிது நேரத்திலேயே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய பிசிசிஐ தலைவர் சௌரங் கங்குலி, ஜோ ரூட் எல்லா நேரங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து டிவிட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “ஜோ ரூட்...என்ன ஒரு சிறந்த வீரர், கடினமான சூழலில் சிறப்பான ஆட்டம், எல்லா நேரங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT