விளையாட்டு

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

Din

ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், நாா்வேயின் கேஸ்பா் ரூட் அரையிறுதிக்கு முன்னேறினாா்.

ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ரூட் 6-4, 6-3 என்ற செட்களில், இத்தாலியின் மேட்டியோ அா்னால்டியை தோற்கடித்தாா். அதேபோல், மற்றொரு காலிறுதியில், 13-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் தாமஸ் மாா்ட்டின் எட்செவெரி 7-6 (7/4), 7-6 (7/1) என்ற செட்களில், 12-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் கேமரூன் நோரியை வென்று அசத்தினாா்.

இதனிடையே, காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா், 5-7, 2-6 என்ற செட்களில், 16-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸிடம் தோற்றாா். மினாா் தனது முந்தைய சுற்றில், நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆா்தா் ஃபில்ஸ் தனது காலிறுதியில், சொ்பியாவின் டுசான் லஜோவிச்சை சந்திக்கிறாா். 17-ஆம் இடத்திலிருந்த ஃபாபியான் மரோஸான் 6-3, 3-6, 1-6 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் ஃபகுன்டோ டியாஸ் அகோஸ்டாவிடம் வெற்றியை இழந்தாா். காலிறுதியில் அகோஸ்டா, 5-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸுடன் மோதுகிறாா்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT