விளையாட்டு

3-வது டி20: ஆண்ட்ரே ரசல் அதிரடி; ஆஸ்திரேலியாவுக்கு 221 ரன்கள் இலக்கு!

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (பிப்ரவரி 13) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து ஷெர்ஃபேன் ரூதர்போர்டு அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேசன் பெஹ்ரண்டிராஃப், ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகா் ரயில்கள் ரத்து

வேதங்கள் கற்பிக்கும் சமூக நீதி

அரசுப் பள்ளிகளின் சாதனை!

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT