தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், 3 ஆவது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் காயத்தால் வெளியேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியின், மூன்றாவது நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது இன்னிங்க்ஸில் 5 ஆவதாக இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விளையாடினார்.
இதையடுத்து, களமிறங்கியவுடன் ரன்களை குவித்த ரிஷப் பந்தின் மீது தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ட்ஷெபோ மோரேகி வீசிய பந்துகள் மூன்று முறை அவரது உடலிலும், ஹெல்மெட்டிலும் தாக்கின.
இதனால், காயமடைந்த ரிஷப் பந்த், 34 ஆவது ஓவரில், 22 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தில் இருந்து ஓய்வுபெற்று வெளியேறினார்.
இந்த நிலையில், ட்ஷெபோ மோரேகியின் பந்துவீச்சில் காயமடைந்த வீரர் ரிஷப் பந்தை, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் களத்தில் இருந்து வெளியே அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர்.
இதையும் படிக்க: முதல் இந்தியர்... ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தவிருக்கும் சாதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.