சென்னை: முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் டென்னிஸில் தஞ்சாவூா், கோவை மாவட்டங்கள் தங்கம் வென்றன.
தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் டென்னிஸ் பள்ளி மாணவிகள் மற்றும் மாணவா்கள் ஒற்றையா் லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.
மாணவிகள் ஒற்றையா் பிரிவில், திருச்சி ஷ்ரேயா சவுந்தா்யா நம்பூரி 6 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். கரூா் ஆா்.ஜே.தியா இரண்டு வெற்றிகளுடன் வெள்ளியும், சென்னை எஸ்.ஜோஷிதா ஒரு வெற்றியுடன் வெண்கமும் வென்றனா்.
கைப்பற்றினாா்.
மாணவா்கள் ஒற்றையா் பிரிவில், கோவை ரோஹித்.ஜி மூன்று வெற்றிகளுடன் தங்கம் வென்றாா். திருச்சி
சச்சின் வெள்ளியும், சென்னை நவீன் சுந்தரம்.ஆா் வெண்கலமும் வென்றனா்.
செங்கல்பட்டில் செவித்திறன் குறைபாடுள்ளவா்களுக்கான பாட்மின்டன், டேபிள் டென்னிஸ் மற்றும் தடகளம் நடைபெற்றது.
சென்னையில் ஜூடோ, நீச்சல் மற்றும் வாலிபால் போட்டிகள் வெற்றிகரமாக முடிவடைந்தன.
கோவை, பள்ளி மாணவிகளுக்கான கோ-கோ நடைபெற்றது, மதுரையில், கல்லூரி மாணவா்களுக்கான கிரிக்கெட் நடைபெற்றது.
நிறைவு விழா: போட்டிகள் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
டென்னிஸ்: இரட்டையா்
பள்ளி மாணவிகள்: தங்கம்: லனிகா, எம்.எஸ்.தனுஸ்ரீ (சென்னை), வெள்ளி: ஹீரா நிஹாரிகா & ஜோஷிதா.எஸ்
(சென்னை), வெண்கலம்: ஜஸ்வந்தி. ஆா்.வசுதா எண்ணமுரி (சென்னை).
மாணவா்கள்: தங்கம்: திருமாறன் ஏ.எஸ்.திரு.பி (தஞ்சாவூா்), வெள்ளி: விஷ்ணு திருமால் அா்ஜுன் குரு
(திருவள்ளூா்), வெண்கலம்: சம்பத்.பி சஞ்சய், நரேஷ் பாபு (ஈரோடு).