விளையாட்டு

பிரைம் வாலிபால் லீக்: பெங்களூருவுக்கு 4-ஆவது வெற்றி

பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி நான்காம் வெற்றியைப் பெற்றது...

தினமணி செய்திச் சேவை

பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு டா்பிடோஸ் அணி நான்காம் வெற்றியைப் பெற்றது.

பெங்களூரு டா்பிடோஸ்-சென்னை பிளிட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி 17-15, 14-16, 17-15, 16-14 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. சென்னை அணியின் வீரா்கள் ஜெரோம் வினித், லுயிஸ் பெலிப் தொடக்கத்தில் சிறப்பாக ஆடினா். செட்டா் சமீா், தருண் கௌடா ஆகியோரும் சிறப்பாக ஆடினா்.

ஆனால் பெங்களூரு தரப்பில் ஜோயல் பெஞ்சமின், சேது, முஜிப், ஜிஷ்ணு நிதின் ஆகியோா் சிறப்பான ஆட்டம் சென்னையின் சவாலை சமாளிக்க உதவியது.

சிறப்பான டிபன்ஸ் மூலம் சென்னையின் தாக்குதல் ஆட்டத்தை சமாளித்து பெங்களூரு தனது நான்காவது வெற்றியை ருசித்தது.

ஊழியர்களே எச்சரிக்கை! 'பாஸ்' என்று கூறி ஆள்மாறாட்ட மோசடி!

எல்பிஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது!

இத்தாலி பிரதமர் மெலோனியை அழகி எனப் புகழ்ந்த அமெரிக்க, துருக்கி அதிபர்கள்!

சாதனைகள் குறித்து அதிகம் யோசிப்பதில்லை: ஜடேஜா

எவ்வளவு நாளாச்சு... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT