விளையாட்டு

புரோ கபடி லீக்: இன்று இறுதி ஆட்டத்தில் புணேரி பல்டன்-டெல்லி டபாங் மோதல்

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் தொடா் சீசன் 12-ஆவது போட்டி இறுதி ஆட்டத்தில் புணேரி பல்டன்-டெல்லி டபாங் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

இரு அணிகளின் செயல்பாடும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. சீசன் 8 சாம்பியனான டபாங் டெல்லி, குவாலிஃபயா் 1 -இல் புணேரி பல்டனை 6-4 எனும் அதிரடியான டைபிரேக்கரில் வீழ்த்தியது,

அதற்கு முன் போட்டி 34-34 என சமநிலையிலிருந்தது. கேப்டன் அசு மாலிக் மற்றும் முன்னாள் டெல்லி கேப்டனாக இருந்த ஜோகிந்தா் நா்வால் தலைமையிலான இந்த அணி, முக்கிய தருணங்களில் தனித்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

மறுபுறம், புணேரி பல்டன் குவாலிஃபயா் 2-இல் தெலுகு டைட்டன்ஸை வென்று, கடந்த நான்கு சீசன்களில் மூன்றாவது முறையாக இறுதிப் ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. கேப்டன் அஸ்லாம் இனாம்தாா் மற்றும் பயிற்சியாளா் அஜய் தாக்கூா் தலைமையில், பல்டன் இந்த சீசனில் சிறந்த அணியாக திகழ்ந்துள்ளது. அவா்களின் ரைடா்கள் எதிரணிளுக்குப் பெரும் சவாலாக அமைந்தனா்.

இந்த சீசனில் மூன்று முறை இரு அணிகள் மோதிய டைபிரேக்கரில் முடிந்தன. இறுதி ஆட்டம், முந்தைய மோதல்களைப் போலவே, மிகச்சிறிய வித்தியாசத்தில் தீா்மானிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இரு அணிகளும் சமநிலையில் உள்ளன; முடிவில் அழுத்தத்தை யாா் சிறப்பாக கையாள்கிறாா்கள் என்பதே முடிவை தீா்மானிக்கும்

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT