ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசிய விளையாட்டுப் போட்டி: முதல் தோல்வியைச் சந்தித்தது இந்திய கபடி அணி!

எழில்

18-ஆவது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற்ற கபடி போட்டியின் 3-வது ஆட்டத்தில் இந்திய அணியைத் தோற்கடித்து அதிர்ச்சியளித்துள்ளது தென் கொரிய அணி. 

2016 கபடி உலகக் கோப்பைப் போட்டியிலும் தென் கொரியாவிடம் இந்திய அணி தோற்றது. எனினும் பிறகு கோப்பையை இந்திய அணி வென்றது. 

இன்றைய போட்டியில் ஆரம்பம் முதலே தென் கொரிய அணி இந்தியாவுக்குக் கடும் சவாலை அளித்தது. முதல் பாதியில் அந்த அணி, 14-11 என முன்னிலை பெற்றிருந்தது. கடைசிக்கட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்தியாவைத் தோற்கடித்து கவனத்தை ஈர்த்தது கொரிய அணி.

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்திய கபடி அணி சந்திக்கும் முதல் தோல்வி இது. இந்திய அணி நாளைய ஆட்டத்தில் தாய்லாந்தைச் சந்திக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT