ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் வீரர்கள்: வெள்ளி வென்றார் சஞ்சீவ் ராஜ்புத்

எழில்

18-வது ஆசியப் போட்டிகள், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் 16 வயது வீரர் செளரப் செளத்ரியும் அபிஷேக் வர்மாவும் தங்கம், வெண்கலம் என முறையே இரு பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார்கள். 

இதையடுத்து, ஆடவருக்கான 50 மீ. ரைஃபிள் பொசிஸன்ஸ் இறுதிச்சுற்றில் போட்டியிட்ட இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவர் 452.7 புள்ளிகள் பெற்றார். 453.3 புள்ளிகள் பெற்ற சீனாவின் ஸிசெங் தங்கம் வென்றார். 

இந்திய அணி இதுவரை பெற்ற 8 பதக்கங்களில் (3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்), 6 பதக்கங்கள் (1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இருந்து கிடைத்துள்ளது. மல்யுத்தம் விளையாட்டில் இரு தங்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்திய அணி 7-ம் இடம் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT