ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

வெள்ளி வென்ற டுட்டி சந்துக்கு ரூ. 1.5 கோடி பரிசுத்தொகை:  ஒடிஷா அரசு அறிவிப்பு!

எழில்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற டுட்டி சந்துக்கு ரூ. 1.50 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது ஒடிஷா அரசு.

கடந்த 2014-ல்  காமன்வெல்த் மற்றும் ஆசியப் போட்டிகளின் போது டுட்டி சந்தின் உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட டெஸ்டோஸ்டெர்டோன் இருந்ததால் ஆண் தன்மை இருப்பதாகக் கூறி இரு போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஹைப்பரேண்ட்ரோஜெனிஸம் எனப்படும் இந்த பிரச்னை டுட்டி சந்தை கடுமையாக அலைகழித்தது. அப்போதிருந்த விதிமுறைகளை காண்பித்து சந்த் ஆசியப் போட்டியில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் தடை விதித்தது. எனினும் சந்த் மனம் தளராமல் விûளாட்டு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் வழக்கு தொடர்ந்தார். அவரது முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம் இந்த ஆண்டு தொடக்கத்தில் சந்துக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன் போட்டியில் 100 மீட்டரில் சந்த் 11.29 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதையடுத்து நீண்ட நீதிமன்ற போராட்டத்துக்கு பின் ஜகார்த்தா ஆசியப் போட்டியில் பங்கேற்கிறார். 

22 வயதான டுட்டி சந்த், நேற்று நடைபெற்ற மகளிர் 100 மீ. இறுதிச்சுற்றில் 11.32 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆசியப் போட்டியில் கடந்த 20 வருடங்களில் இந்தப் பிரிவில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது. 

இதையடுத்து வெள்ளிப் பதக்கம் வென்ற டுட்டி சந்துக்கு ரூ. 1.50 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது ஒடிஷா அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT