ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

200 மீ. ஓட்டப்பந்தயம்: இறுதிச்சுற்றுக்கு டுட்டி சந்த் தகுதி, ஹிமா தாஸ் தகுதியிழப்பு!

மகளிர் 200 மீ. ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு  இந்தியாவின் டுட்டி சந்த் தகுதி பெற்றுள்ளார்...

எழில்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 200 மீ. ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு  இந்தியாவின் டுட்டி சந்த் தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற 200 மீ. ஓட்டத்தின் அரையிறுதிச் சுற்றில், டுட்டி சந்த் 23.00 விநாடிகளில் ஓடி முதலிடம் பிடித்தார். இதையடுத்து அவர் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளார். 

எனினும் மற்றொரு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் ஹிமா தாஸ் தவறுதலாக ஓட்டத்தைத் தொடங்கியதால் தகுதியிழப்பு அடைந்தார். 

22 வயதான டுட்டி சந்த், சமீபத்தில் நடைபெற்ற மகளிர் 100 மீ. ஓட்டப்பந்தயத்தின் இறுதிச்சுற்றில் 11.32 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆசியப் போட்டியில் கடந்த 20 வருடங்களில் இந்தப் பிரிவில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது. இதனால் 200 மீ. ஓட்டப்பந்தயத்திலும் அவர் பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இறுதிச்சுற்று நாளை மாலை இந்திய நேரம் 5.20 மணிக்கு நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT