ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி: மீண்டும் வெள்ளிப் பதக்கம் வென்றார் டுட்டி சந்த்

எழில்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 200 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் டுட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இன்று நடைபெற்ற மகளிர் 200 மீ. ஓட்டத்தில் பஹ்ரைனின் எடிடியாங் 22.96 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் டுட்டி சந்த் முதல் 100 மீ. தூரம் வரை முன்னிலையில் இருந்தார். பிறகு அவரால் அதைத் தக்கவைக்கமுடியவில்லை. 23.20 விநாடிகளில் தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் டுட்டி சந்த்.  வீ யோங்க்லி வெண்கலம் வென்றார். 100 மீ. ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீராங்கனைகளே இதிலும் அதே இடங்களைப் பிடித்துள்ளார்கள். 

22 வயதான டுட்டி சந்த், சமீபத்தில் நடைபெற்ற மகளிர் 100 மீ. ஓட்டப்பந்தயத்தின் இறுதிச்சுற்றில் 11.32 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆசியப் போட்டியில் கடந்த 20 வருடங்களில் இந்தப் பிரிவில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT