முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பை: இதுவரை அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

2019 உலககக் கோப்பைப் போட்டியின் லீக் சுற்று முடிவடைய இன்னும் ஆறு நாள்களே உள்ளன...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:24 AM
பகிர்:

2019 உலககக் கோப்பைப் போட்டியின் லீக் சுற்று முடிவடைய இன்னும் ஆறு நாள்களே உள்ளன. எல்லா அணிகளுக்கும் ஓரிரு ஆட்டங்களே மீதமுள்ளன. இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்குச் சமமாகப் பந்துவீச்சாளர்களும் இந்தப் போட்டியில் அசத்தி வருகிறார்கள். இதுவரையிலான அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்:

அதிக ரன்கள்

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மூன்று சதங்கள் அடித்த ஒரே வீரர், ரோஹித் சர்மா. ஆனால் அவரால் டாப் 5 பட்டியலில் இடம்பிடிக்கமுடியவில்லை. அவருக்குத் தற்போது 6-ம் இடமே (440 ரன்கள்) கிடைத்துள்ளது. 382 ரன்களுடன் கோலி 7-ம் இடத்தில் உள்ளார்.

எண்   பெயர் இன்னிங்ஸ் ரன்கள் சதங்கள்  அரை   சதங்கள்  சிக்ஸர் 
 1.

 டேவிட் வார்னர்   (ஆஸ்திரேலியா)

 8 516 2 3 6
 2. ஃபிஞ்ச்   (ஆஸ்திரேலியா)  8 504 2 3 18
 3. ஷகிப் அல் ஹசன்   (வங்கதேசம்)  6 476 2 3 2
 4. ரூட் (இங்கிலாந்து) 8 476 2 3 2
 5. வில்லியம்சன்   (இங்கிலாந்து) 6 454 2 1 3

அதிக விக்கெட்டுகள்

3 ஆட்டங்களே விளையாடினாலும் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் ஷமி. ஸ்டார்க் போல 8 ஆட்டங்களில் விளையாடியிருந்தால் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பாரோ?

எண்   பெயர் இன்னிங்ஸ்  விக்கெட்டுகள்  5   விக்கெட்டுகள்         எகானமி 
 1.

 ஸ்டார்க்   (ஆஸ்திரேலியா) 

 8 24 2 5.01
 2. ஃபெர்குசன்   (நியூஸிலாந்து) 7 17 0 4.96
 3. முகமது அமிர்   (பாகிஸ்தான்) 7 16 1 4.95
 4. ஆர்ச்சர்   (இங்கிலாந்து) 8 16 0 5.01
 5. ஷமி (இந்தியா) 3 13 1 4.77

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.