முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

இந்திய அணியில் இரு மாற்றங்கள்: இலங்கை அணி முதலில் பேட்டிங்!

புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 13 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் இலங்கை அணி 8 புள்ளிகளுடன் 6-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:27 AM
பகிர்:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.

புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 13 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும் இலங்கை அணி 8 புள்ளிகளுடன் 6-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்திய அணி இந்த ஆட்டத்தில் வென்று, அடுத்து நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோற்றுவிட்டால் புள்ளிகள் பட்டியலில் மாற்றம் ஏற்படும். 15 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்து அரையிறுதியில் நியூஸிலாந்தைச் சந்திக்கவேண்டும் என்பதே ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. 

டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஹால், ஷமிக்குப் பதிலாக குல்தீப், ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.