முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து தெ.ஆ. வீரர் டேல் ஸ்டெய்ன் விலகல்!

உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விலகியுள்ளார்...

கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து தெ.ஆ. வீரர் டேல் ஸ்டெய்ன் விலகல்!

உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விலகியுள்ளார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:09 AM
பகிர்:

உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விலகியுள்ளார். 

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன், இந்த உலகக்கோப்பையின் முதல் இரு ஆட்டங்களில் விளையாடவில்லை. இந்நிலையில் காயம் குணமாகாததால் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஸ்டெய்ன் விலகியுள்ளார். இதையடுத்து ஸ்டெய்னுக்குப் பதிலாக இடக்கை வேகப்பந்துவீச்சாளர் பெரன் ஹெண்ட்ரிக்ஸ் தெ.ஆ. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தென் ஆப்பிரிக்க அணி நாளைய உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது. முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

முழு கட்டுரையைப் படிக்க →