இந்தமுறையும் இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிக்குமா வங்கதேசம்?: இங்கிலாந்து முதலில் பேட்டிங்!
2011 மற்றும் 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டங்களில்...
இங்கிலாந்து - வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் கார்டிஃபில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் மாற்றம் எதுவும் இல்லை. இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்குப் பதிலாக பிளங்கெட் தேர்வாகியுள்ளார்.
2011 மற்றும் 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.