கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

ரோஹித், ராகுல் அரைசதம்: இந்தியா சூப்பர் தொடக்கம்

DIN


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மான்செஸ்டரில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

இந்திய அணியில் தவான் இல்லாததால் ரோஹித் சர்மாவுடன், கேஎல் ராகுல் களமிறங்கினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவது இதுவே முதன்முறை. ரோஹித் சர்மா தனது வழக்கத்துக்கு மாறாக பவுண்டரிகள் அடித்து துரிதமாக ரன் குவித்தார். இதனால், ராகுல் விக்கெட்டை பாதுகாத்து மெதுவாக ரன் குவித்து வந்தார். 

பேட்டிங்கில் இருவரும் சிறப்பாக விளையாடி வந்தாலும், ரன் ஓடுவதில் இருவருக்கும் இடையில சரியான தொடர்பு இல்லை. இதன் விளைவாக ரோஹித் சர்மா இரண்டு முறை ரன் அவுட் ஆகியிருக்கக்கூடும். ஆனால், இரண்டு த்ரோவும் சரியான திசையில் வீசப்படாததால் ரோஹித் தப்பினார். 

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் குறைந்த பந்துகளில் அடித்த அரைசதம் இதுவாகும். 

ரோஹித், ராகுல் இணையின் இந்த சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 18-வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது. பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ், பந்துவீச்சாளர்களை மாற்றியும் அது அவருக்கு பலனளிக்கவில்லை. 

இதனால், கேஎல் ராகுலும் தனது 69-வது பந்தில் சிக்ஸர் மூலம் அரைசதத்தை எட்டினார். ராகுலும், அரைசதம் அடித்த பிறகு துரிதமாக ரன் குவிக்கத் தொடங்கினார். இது பாகிஸ்தானுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், வாஹப்பை மீண்டும் பந்துவீச அழைத்தார் சர்பிராஸ். அதன் பலனளிக்கும் வகையில் ராகுல் ஆட்டமிழந்தார். ராகுல் 78 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, துணை கேப்டன் ரோஹித்துடன் கேப்டன் கோலி இணைந்தார். 

சற்று முன் வரை இந்திய அணி 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: 2 லட்சம் வாக்குகள்.. ராகுல்

விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு!

மகாராஷ்டிரத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை!

தருமபுரியில் செளமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை!

SCROLL FOR NEXT