கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

மே.இ. அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்த வங்கதேசம்: ஹைலைட்ஸ் விடியோ!

எழில்

மேற்கிந்தியத் தீவுகளை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டாண்டனில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 321/8 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேசம் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் அபார ஆட்டத்தால் 51 பந்துகள் மீதமிருக்க வெற்றி கண்டது. 16 பவுண்டரியுடன் 99 பந்துகளில் 124 ரன்களுடன் ஷகிப்பும், 4 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 69 பந்துகளில் 94 ரன்களுடன் லிட்டன்தாஸும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இது மே.இ.தீவுகள் பெற்ற 3-ஆவது தோல்வியாகும். 5 புள்ளிகளுடன் வங்கதேசம் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது. ஒரு நாள் ஆட்டத்தில் 6000 ரன்கள், மற்றும் 200 விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்திய ஆல்ரவுண்டர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தினார் ஷகிப். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT