கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று அதிரடி மாற்றங்கள்!

முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெறாத முஹமது ஆமிர், வஹாப் ரியாஸ், ஆசிஃப் அலி ஆகியோர்...

எழில்

வரும் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒரு மாதத்துக்கு முன்பு உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெறாத முஹமது ஆமிர், வஹாப் ரியாஸ், ஆசிஃப் அலி ஆகியோர் தற்போது அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஜுனைத் கான், ஃபஹீம் அஷ்ரஃப், அபித் அலி ஆகியோர் முதலில் அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். வஹாப் ரியாஸ், 2017 ஜூன் மாதம் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார். இந்நிலையில் தற்போது உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி: சர்ஃபராஸ் அஹமது (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஃபகார் ஸமான், இமாம் உல் அஹ், பாபர் அஸாம், ஹாரிஸ் சொஹைல், ஆசிஃப் அலி, சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், இமாத் வாசிம், சதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, முகமது ஆமீர், வஹாப் ரியாஸ், முகமது ஹஸ்நைன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

SCROLL FOR NEXT