கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

நான் இப்படித்தான் விளையாடுவேன்: ரோஹித் சர்மா உறுதி!

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

2015 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ரோஹித் சர்மா. அவர் 130 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் விராட் கோலி. 55 சிக்ஸர்கள். அதற்கடுத்த இடத்தில் தோனி. 41 சிக்ஸர்கள்.

இந்நிலையில் தான் விளையாடும் விதம் குறித்து ஆங்கில நாளிதழுக்கு ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் ரிஸ்க் எடுத்து அதிரடியாக விளையாடக்கூடாது என்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னை ஒரு கிரிக்கெட் வீரராக அறிந்துகொண்டதற்குக் காரணம், அதிரடி ஷாட்கள்தான். ரிஸ்க் எடுக்காவிட்டால் என்னால் இத்தனை ரன்கள் எடுத்திருக்கமுடியாது. எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் கூட, நான் எப்படி விளையாட வேண்டும் என்று எனக்குப் பாடம் எடுக்கிறார்கள். ஆனால் தினமும் இதுபோன்ற ஆலோசனைகளைக் கேட்டுப் பழகிவிட்டேன்.

எனக்கென்று சில உத்திகள் உள்ளன. அவை எனக்குக் கைக்கொடுக்கும். நான் இரட்டைச் சதங்கள் எடுத்தபோது, நான் ரன்கள் எடுத்த விதத்தைக் கவனியுங்கள். 5 பந்துகளில் 10 ரன்கள், 25 பந்துகளில் 50 ரன்கள் என விரைவாக ரன்கள் எடுத்திருக்கமாட்டேன். நீண்ட நேரம் ஆடியே அந்த ரன்களை எடுத்திருப்பேன். அதேசமயம் அதிக இலக்கு உள்ள ரன்களை விரட்டும்போது விரைவாகத்தான் ஆடவேண்டும். என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT