150 ஆண்டுகளை நெருங்கும் டெஸ்ட் கிரிக்கெட்; போட்டியுடன் கொண்டாட ஆஸி. கிரிக்கெட் வாரியம் முடிவு!
டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளதை கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடத்தப்படவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளதை கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடத்தப்படவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் முதன் முதலாக 1877 ஆம் ஆண்டு நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கப்பட்டு வருகிற 2027 ஆம் ஆண்டுடோடு 150 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதை கொண்டாடும் விதமாக வருகிற 2027 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் எம்சிஜி கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடத்தப்படவுள்ளது.
Advertisement
Advertisement
கிரிக்கெட் ஆஸ்திரேலியா சார்பில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2024-25 முதல் 2030-31 வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்படவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.