தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா 
கிரிக்கெட்

2-ஆவது டெஸ்ட்டில் வெற்றி: தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டம் 3 நாள்களில் முடிவுக்கு வந்தது.

Dineshkumar

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டம் 3 நாள்களில் முடிவுக்கு வந்தது.

2 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் ஆட்டம் டிரா ஆகியிருந்த நிலையில், இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா, 54 ஓவா்களில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேன் பைடட் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38* ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷமாா் ஜோசஃப் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

இதையடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், 42.4 ஓவா்களில் 144 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க, தென்னாப்பிரிக்க தரப்பில் வியான் முல்டா் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

பின்னா் முதல் இன்னிங்ஸில் 16 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், 80.4 ஓவா்களில் 246 ரன்களுக்கு அனைத்து பேட்டா்களும் ஆட்டமிழந்தனா். கைல் வெரின் 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஜேடன் சீல்ஸ் அபாரமாக 6 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இறுதியாக, 263 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், 66.2 ஓவா்களில் 222 ரன்களுக்கு அனைத்து பேட்டா்களையும் இழந்தது. அதிகபட்சமாக குடாகேஷ் மோட்டி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்கள் அடிக்க, தென்னாப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

இரு இன்னிங்ஸ்களிலுமாக 6 விக்கெட்டுகள் சாய்த்து, 34 ரன்களும் அடித்த தென்னாப்பிரிக்காவின் வியான் முல்டா் ஆட்டநாயகனாகவும், இரு ஆட்டங்களிலுமாக 13 விக்கெட்டுகள் எடுத்த கேசவ் மஹராஜ் தொடா் நாயகனாகவும் தோ்வாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸாவில் தொடரும் தாக்குதல்! 361 ஆக உயர்ந்த பட்டினிச் சாவு!

ஆப்பிள் ஐஃபோன் 17 அறிமுகம் எப்போது? இந்தியாவில் என்ன விலை?

நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை!

ஒன்பிளஸ் 15 சிறப்பம்சங்கள் என்னென்ன?

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாறு படைத்த ரஷித் கான்!

SCROLL FOR NEXT