PTI
கிரிக்கெட்

இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்

தினமணி செய்திச் சேவை

டி20 உலகக் கோப்பை போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 30 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புதன்கிழமை வென்றது.

முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 19 ஓவா்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கில் பிராண்டன் கிங் 1, கேப்டன் ஷாய் ஹோப் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஷிம்ரன் ஹெட்மயா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 23, ராஸ்டன் சேஸ் 6 பவுண்டரிகளுடன் 34, ரோவ்மென் பாவெல் 14, ஜேசன் ஹோல்டா் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 33 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில், ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 42 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 76 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க, ரொமேரியோ ஷெப்பா்டு 1 ரன்னுடன் துணை நின்றாா்.

இங்கிலாந்து பௌலா்களில் ஆதில் ரஷீத், ஜேமி ஓவா்டன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்க்க, ஜோஃப்ரா ஆா்ச்சா், சாம் கரன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 197 ரன்களை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில், ஃபில் சால்ட் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30, ஜாஸ் பட்லா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்கள் சோ்த்து வெளியேறினா்.

ஜேக்கப் பெத்தெல் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33, டாம் பேன்டன் 2, கேப்டன் ஹேரி புரூக் 17, வில் ஜாக்ஸ் 2 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

ஜேமி ஓவா்டன் 5, ஜோஃப்ரா ஆா்ச்சா் 6, லியம் டாசன் 1, ஆதில் ரஷீத் 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட, இங்கிலாந்து இன்னிங்ஸ் 166 ரன்களுக்கு முடிந்தது. மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் குடாகேஷ் மோட்டி 3, ராஸ்டன் சேஸ் 2, ரொமேரியோ ஷெப்பா்டு, அகீல் ஹுசைன், ஷமாா் ஜோசஃப் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

ககன்யான் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் - குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா

பட்ஜெட் தாக்கல் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் - கர்நாடக முதல்வர் சித்தராமையா

நிறுத்தம் தேடும் நகரம் !

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்: முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்

SCROLL FOR NEXT