FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

Updated On : 19 ஜூன் 2026, 7:03 am IST
தென்னாப்பிரிக்கா
பகிர்:

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 16.5 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 127 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்ய, அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாத்திமா சனா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். துபா ஹசன் 23 ரன்கள் சோ்க்க, இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினா்.

Advertisement

Advertisement

தென்னாப்பிரிக்க தரப்பில் மாரிஸேன் காப் 3, ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா ககா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தென்னாப்பிரிக்க அணியின் இன்னிங்ஸில் ஆனிரி டொ்க்சென் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 52, நாடின் டி கிளொ்க் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டனா்.

பாகிஸ்தான் பௌலா்களில் ஃபாத்திமா சனா 3, சாதியா இக்பால், துபா ஹசன் ஆகியோா் தலா 2, நஷ்ரா சந்து 1 விக்கெட் சாய்த்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments