படம் | ஐசிசி
கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்; சனத் ஜெயசூர்யா அறிவுரை!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வாய்ப்பை இலங்கை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வாய்ப்பை இலங்கை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த அணியின் இடைக்காலப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை (ஆகஸ்ட் 21) முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வாய்ப்பை இலங்கை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இலங்கை வீரர்களுக்கு இருக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பு எளிதில் மீண்டும் கிடைக்காது. இதுபோன்ற வாய்ப்புகள் அமையும்போதே அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு ஆடுகளங்கள் சமமானதாக இருந்தாலும், ரன்கள் குவிப்பது கடினம். பந்தில் வேகம் மற்றும் ஸ்விங் இருக்கும்போது, அதற்கேற்றவாறு விளையாட வேண்டும்.

அணியில் 6-7 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கினால், அவர்களில் 2-3 பேர் கண்டிப்பாக நன்றாக செயல்படுவார்கள். பேட்ஸ்மேன்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தால், அவர்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். அனைவரும் அவர்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

கோடை காலத்தின் பிற்பகுதியில் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுவது மிகவும் சிறப்பானது. கோடையில் தொடர் நடைபெறுவதால் இலங்கையில் உள்ள வானிலை போன்றே இங்கிலாந்திலும் இருக்கும். வீரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பந்துவீச்சை பொறுத்தவரையில், இலங்கை அணிக்கு முதல் 10 ஓவர்கள் மிகுந்த அழுத்தம் நிறைந்ததாக இருக்கக் கூடும். இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கக் கூடியவர்கள். அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பது நமக்குத் தெரியும். சரியான இடங்களில் பந்துவீசி விக்கெட்டினை வீழ்த்த வேண்டும். அவர்கள் அதிரடியாக விளையாடும்போது, முக்கியமான இடங்களில் ஃபீல்டர்களை நிறுத்தி பவுண்டரிகளைத் தடுக்க வேண்டும் என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 4-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 7-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT