டேரியஸ் விஸ்ஸெர் படம் | எக்ஸ்
கிரிக்கெட்

ஒரே ஓவரில் 39 ரன்கள் விளாசி யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வீரர்!

ஒரே ஓவரில் 39 ரன்கள் விளாசி யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார் சமோவா தீவைச் சேர்ந்த வீரர்.

DIN

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை சமோவா தீவைச் சேர்ந்த வீரர் டேரியஸ் விஸ்ஸெர் முறியடித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான டி20 போட்டிகளின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் சாமோ தீவுகளின் தலைநகரான அபியாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் வனுவாட்டுவைச் சேர்ந்த 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் நளின் நிபிக்கோ வீசிய 15 ஆவது ஓவரில் முதல் 3 பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்ட சாமோ வீரர் டேரியஸ் விஸ்ஸெர் மொத்தமாக 6 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் விளாசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

நளின் நிபிக்கோ மொத்தமாக 9 பந்துகளை வீசினார். அதில், மூன்று நோ-பால்களும் அடங்கும்.

டேரியஸ் விஸ்ஸெர் 14 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 62 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசிய சாமோவைச் சேர்ந்த முதல் வீரர் என்றச் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார் டேரியஸ் விஸ்ஸெர்.

15 ஆவது ஓவரில் டேரியஸ் விஸ்ஸெர் ரன்கள் அடித்த விவரம்: 6, 6, 6, 1nb, 6, 0, 1nb, 7nb, 6

சாமோ அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. அடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வனுவாட்டு அணியால் 20 ஓவர்களில் 164 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், சாமோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஒரு ஓவரில் 36 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. 17 ஆண்டுகால சாதனையை தற்போது சாமோவைச் சேர்ந்த வீரர் டேரியஸ் விஸ்ஸார் முறியடித்துள்ளார்.

இதேபோல, மேற்கிந்தியத் தீவுகளின் கீரன் பொல்லார்ட் மற்றும் நிக்கோலஸ் பூரன், நேபாளத்தின் தீபேந்திர சிங் ஐரி, இந்தியாவின் ரோஹித் சர்மா, ரிங்கு சிங் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக சிலி நாட்டின் புளோரன்சியா மார்டினெஸ் 52 ரன்கள் எடுத்ததே மகளிர் டி20 சர்வதேசப் போட்டியில் ஒரே ஓவரில் அடித்த அதிகபட்ச ரன்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT