படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: 448 ரன்களுக்கு டிக்ளேர் செய்த பாகிஸ்தான்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஆகஸ்ட் 21) ராவல்பிண்டியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்திருந்தது. சௌத் ஷகீல் 57 ரன்களுடமும், ரிஸ்வான் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினர். சௌத் ஷகீல் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அஹா சல்மான் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்திருந்தபோது, அந்த அணி டிக்ளேர் செய்தது. முகமது ரிஸ்வான் 171 ரன்களுடனும் (11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்), ஷாகின் ஷா அஃப்ரிடி 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணி டிக்ளேர் செய்ததையடுத்து, வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT