படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

358 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 21) தொடங்கியது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, மிலன் ரத்னாயகே 72 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் சோயப் பஷீர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கஸ் அட்கின்சன் இரண்டு விக்கெட்டுகளையும், மார்க் வுட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் சதம் விளாசி அசத்தினார். அவர் 148 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹாரி ப்ரூக் 56 ரன்களும், ஜோ ரூட் 42 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும், விஸ்வா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், மிலன் ரத்னாயகே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி இலங்கையைக் காட்டிலும் 122 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்னதாக அந்த அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இருவா் கைது

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

SCROLL FOR NEXT