ஜோஸ் ஹேசில்வுட் படம் | ஐசிசி
கிரிக்கெட்

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

DIN

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சிட்னியில் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹேசில்வுட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அணியில் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக ரைலி மெரிடித் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரில், வேகப் பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் அணியில் இல்லாத நிலையில், தற்போது காயம் காரணமாக ஹேசில்வுட்டும் அணியிலிருந்து விலகியுள்ளார்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அப்பாட், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஷ், ரைலி மெரிடித், மார்கஸ், ஸ்டாய்னிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT