ஜாகோப் ஓரம் படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி அந்த அணியின் முன்னாள் வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி அந்த அணியின் முன்னாள் வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி அந்த அணியின் முன்னாள் வீரர் ஜாகோப் ஓரமை டெஸ்ட் அணிக்கான பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

வலதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகோப் ஓரம் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார். மூன்று 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 4 டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ள ஜாகோப் ஓரமின் பரந்த அனுபவம் நியூசிலாந்து அணிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT