30 வயதுக்கு முன்பும் 30 வயதுக்கு பின்பும்...! ஜோ ரூட்டின் ருத்ர தாண்டவம்!
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 30 வயதுக்குப் பிறகு அற்புதமாக விளையாடி வருகிறார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 358/7 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரது 33ஆவது டெஸ்ட் சதம்.
இந்த சதத்தின் மூலம் இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்கின் சாதனையை 33 வயதாகும் ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இது மட்டுமில்லாமல் தற்போது விளையாடிவரும் கிரிக்கெட் வீரர்களில் அதிக சதங்கள் (49) அடித்தவர் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் கோலி (80) இருக்கிறார்.
30 வயதுக்கு மேல் ஜோ ரூட் அற்புதமாக விளையாடி வருகிறார். தலைசிறந்த நால்வர்களில் (பேபுலஸ் ஃபோர்) ஜன.2021இல் 17 சதங்களில் இருந்தார். தற்போது 33 சதங்கள் வந்தடைந்துள்ளார்.
தலைசிறந்த நால்வர்களில் அதிக சதமடித்தவராக முன்னேறியுள்ளார்.
30 வயதுக்கு முன்பு 177 இன்னிங்ஸில் 17 சதங்கள் அடித்த ஜோ ரூட், 30 வயதுக்குப் பிறகு 87 இன்னிங்ஸில் 16 சதங்கள் அடித்துள்ளார்.
30 வயதுக்கு முன்பு ஆடியதைவிட தற்போது இரண்டு மடங்கு சிறப்பாக விளையாடி வருகிறார்.
30 வயதுக்குமேல் விளையாட்டில் எதுவும் சாதிக்க முடியாதென காலம்காலமாக கூறிவரும் நிலையில் ஜோ ரூட் அதனை தவிடுபொடியாக்கி விளையாடிவருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.