கிரிக்கெட்

ரியான், பவுமா அசத்தல்: தெ.ஆ.வுக்கு வலுவான தொடக்கம்!

இலங்கைக்கு எதிரான போட்டியில் ரியான், பவுமா அசத்தல்.

DIN

தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கியூபார்காவில் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போட்டியில் முதல் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்யவந்த டோனி ஜி ஜோர்ஜி டக் -அவுட்டாகி வெளியேற, எய்டன் மார்க்ரம் 20 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கடந்தப் போட்டியில் சதம் விளாசிய ஸ்டப்ஸ் 4 ரன்னில் அவுட்டாக, ரியான் ரிக்கெல்ட்சன், கேப்டன் தெம்பா பவுமா இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் ரியான் சதமும், தெம்பா பவுமா அரைசதமும் விளாசினர்.

அடிலெய்டில் விராட் கோலியின் ஆதிக்கம் தொடருமா?

ரியான் 101 ரன்களிலும், தெம்பா பவுமா 78 ரன்களிலும் வெளியேறினர். தெம்பா முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமும், 2-வது இன்னிங்ஸில் அரைசதமும் விளாசியிருந்தார்.

முதல் நாள் முடிவில் 86.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் கைல் வெரையன் 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இலங்கை அணித் தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2-வது நாள் ஆட்டம் நாளை(டிச.6) நடைபெறுகிறது.

ஜெய்ஸ்வால் வம்பிழுத்தது குறித்து மனம்திறந்த மிட்செல் ஸ்டார்க்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலமானாா் நா. பிரகாசம்

முடிவுக்கு வந்தது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

ஊரக வளா்ச்சித்துறை சமத்துவப் பொங்கல் விழா!

SCROLL FOR NEXT