டிராவிஸ் ஹெட் படம் | AP
கிரிக்கெட்

ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளும் அழுத்தத்தில் இருக்கிறேனா? டிராவிஸ் ஹெட் பதில்!

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பேசியுள்ளார்.

DIN

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலிய அணி 86 ரன்கள் எடுத்து அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

அழுத்தத்தில் இருக்கிறேனா?

அடிலெய்டு டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, போட்டி குறித்து பேசிய டிராவிஸ் ஹெட், ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்வதை நினைத்து நான் அதிகம் கவலைப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா ஸ்டம்புகளை குறிவைத்து துல்லியமாக பந்துவீசுகிறார். அவரது பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுக்க மாட்டார். ஆனால், ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக பேட் செய்யும்போது, நமது கால்களின் நகர்வுகளை சரியாக மேற்கொண்டு விளையாட வேண்டும்.

ஜஸ்பிரித் பும்ரா கால்களை குறிவைத்தே அதிகம் பந்துவீசுவார். நான் இந்த விஷயத்தில் கவனம் கொடுத்து விளையாடவுள்ளேன். அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். ஆனால், அவர் மற்ற பந்துவீச்சாளர்களைப் போன்று ஒரு பந்துவீச்சாளரே. பிங்க் பந்துவீச்சில் அவருக்கு எதிராக விளையாடுவதை நினைத்து நான் மிகுந்த அழுத்தத்தில் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT