மிட்செல் ஸ்டார்க் படம்: ஏபி
கிரிக்கெட்

ஜெய்ஸ்வாலை பழிதீர்த்த மிட்செல் ஸ்டார்க்..! ஆக்ரோஷமாக கொண்டாடிய விடியோ வைரல்!

இந்திய வீரர் ஜெய்ஸ்வாலின் விக்கெட் எடுத்து ஆக்ரோஷமாக கொண்டாடிய ஸ்டார்க் விடியோ வைரலாகி வருகிறது.

DIN

முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவின் மூத்த வீரரும் வேகப் பந்துவீச்சாளருமான மிட்செல் ஸ்டார்க் ஓவரில் அதிரடியாக விளையாடியது மட்டுமல்லாமல் 142 கி.மீ/மணி வேகத்தில் வீசிய ஸ்டார்க்கிடம், “உங்களது பந்து மிக மெதுவாக வருகிறது” எனக் கூறினார்.

பின்னர் ஸ்டார்க் ஜெய்ஸ்வாலை பாராட்டி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலின் விக்கெட்டினை வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க்.

விக்கெட் எடுத்து ஆக்ரோஷமாக கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.

பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 12இல் 11 வெற்றி பெற்றுள்ளது. மிட்செல் ஸ்டார்க்தான் ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக 50 விக்கெட்டுகள் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிங்க் பந்து கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் 66 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

இந்திய அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் போலாண்ட் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT